Jul 10, 2026
Thisaigal NewsYouTube
போக்குவரத்து அபராதங்களை உயர்த்துதல் உட்பட  சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் புதிய திருத்தங்கள் பரிந்துரை
தற்போதைய செய்திகள்

போக்குவரத்து அபராதங்களை உயர்த்துதல் உட்பட சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் புதிய திருத்தங்கள் பரிந்துரை

Share:

நாட்டில் 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் பல முக்கிய சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான புதிய சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.

இம்முயற்சியானது, போக்குவரத்துத் துறை மற்றும் அமலாக்கப் பிரிவுகள் வேகமாக டிஜிட்டல் மயமாக மாறி வருவதை ஈடுசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் சுட்டிக்காட்டினார்.

இந்த சட்டத் திருத்த மசோதாவில் 11 முக்கிய சீர்திருத்த எல்லைகளும், 42 விதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன்படி, சிறிய அளவிலான விபத்துகளில் சிக்கியவர்கள் போலீஸ் நிலையங்களுக்கு நேரடியாக செல்லாமல் ஆன்லைன் மூலமாகவே போலீஸ் புகார் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர்.

மேலும், குறிப்பிட்ட சில கடுமையான மற்றும் தொடர் போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகையை கணிசமாக உயர்த்தவும் இந்த மசோதா பரிந்துரைக்கிறது என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

தவிர சட்டவிரோத மோட்டார் பந்தயங்கள், அமலாக்க அதிகாரிகளை வேவு பார்க்கும் சட்டவிரோத டொண்டோ கும்பல்கள் மீதான கடுமையான நடவடிக்கைகள் மற்றும் இ-ஸ்கூட்டர்கள் போன்ற மைக்ரோ-மொபிலிட்டி வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான தெளிவான சட்டக் கட்டமைப்புகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன அமைச்சர் அந்தோணி லோக் விளக்கினார்.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்