Jul 18, 2026
Thisaigal NewsYouTube
மிகவும் வெப்பமான ஆண்டு: நாட்டில்  37.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயர வாய்ப்பு
தற்போதைய செய்திகள்

மிகவும் வெப்பமான ஆண்டு: நாட்டில் 37.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயர வாய்ப்பு

Share:

எல்க நினோ காலநிலை நிகழ்வு காரணமாக, நாட்டில் இந்த ஆண்டு வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் ஆர்தர் ஜோசப் குருப் எச்சரித்துள்ளார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற இளைஞர் இஎஸ்ஜி மன்ற கலந்துரையாடல் நிகழ்வில் பேசிய அமைச்சர், இந்த ஜூலை முதல் அடுத்த ஆண்டின் முற்பாதி வரை நாட்டின் மழைப்பொழிவு 40 விழுக்காடு வரை குறைய வாய்ப்புள்ளதால், இது வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான ஆண்டாக மாறக்கூடும் என்று தரவுகள் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.

இந்தக் கடுமையான வறட்சி மற்றும் வெப்பமான சூழலை எதிர்கொள்ள கூட்டரசு மற்றும் மாநில அரசு முகமைகள் தங்களின் தயார்நிலை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. தேசிய பனிமூட்டம் மற்றும் வறண்ட காலநிலைக்கான முதன்மைக் குழு கூட்டத்தில் இதற்கான உத்திகள் விவாதிக்கப்பட்டதாக ஆர்தர் ஜோசப் குருப் தெரிவித்தார்.

Related News