Jul 18, 2026
Thisaigal NewsYouTube
உலகக்கிண்ணக் காற்பந்து சூதாட்டம்: நாடு தழுவிய அளவில் 58 பேர் கைது
தற்போதைய செய்திகள்

உலகக்கிண்ணக் காற்பந்து சூதாட்டம்: நாடு தழுவிய அளவில் 58 பேர் கைது

Share:

2026 ஆம் ஆண்டு உலகக்கிண்ணக் காற்பந்து போட்டியை முன்னிட்டு, சட்டவிரோத பந்தயம் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நாடு தழுவிய அளவில் 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசிய தொடர்புத்துறை மற்றும் பல்லூடக ஆணையத்தின் வியூக ஒத்துழைப்புடன் கடந்த ஜூன் 11 ஆம் தேதி 'ஓப் சோகா 11 ' எனும் சிறப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றவியல் புலனாய்வுத்துறை இயக்குனர் டத்தோ எம். குமார் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நடத்தப்பட்ட 52 சோதனைகளில் 54 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் உட்பட 58 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 25 ஆயிரத்து 684 ரிங்கிட் ரொக்கப் பணமும், சுமார் 4 லட்சத்து 88 ஆயிரத்து 582 ரிங்கிட் மதிப்புள்ள பந்தயப் தொகையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இச்சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட 42 இணையதளங்கள் மற்றும் செயலிகளை முடக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.

Related News