கடந்த மாதம் புக்கிட் காயு ஹீத்தாம் எல்லைப் பகுதியில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை வாகனங்களில் ஏற்றிச் சென்றதாக இரு ராணுவ வீரர்கள் மீது இன்று ஆலோர்ஸ்டார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
34 வயதான ஸுல்ஹில்மி அக்வா ரஹ்மான் மற்றும் 26 வயதான ஜோஹான் இஸ்கந்தர் ஷா ஜெஃப்ரி ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிபதி ஷர்மிலா அப்துல் சமத் முன்னிலையில் தனித்தனியாக வாசிக்கப்பட்டபோது, அவர்கள் அதனைப் புரிந்து கொண்டதாக தலைமை அசைத்தனர். எனினும், அவர்களிடம் எந்தவொரு வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த மே 22 அன்று மாலை புக்கிட் காயு ஹீத்தாம் ஐசிக்யூஎஸ் வளாகத்தின் சோதனைச் சாவடியில் அவ்விரு வீரர்களும் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2007 ஆம் ஆண்டு ஆள் கடத்தல் மற்றும் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் அந்த இரண்டு வீரர்களும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.








