தங்களின் முதலீட்டிற்கான பிராந்திய மையமாக மலேசியாவை உருவாக்கி கொள்வதற்கு சீனாவின் சில முன்னணி நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
வழக்கமாக, தங்களின் வர்த்தக் பிராந்தியமாக அண்டை நாடுகளை உருவாக்கிக் கொள்ளும் சீனாவின் முன்னணி நிறுவனங்கள், முதல் முறையாக தங்களின் வர்த்தகப் பிராந்தியத்தின் மையமாக மலேசியாவை உருவாக்கிக் கொள்வதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளதாக, புத்ராஜெயாவில் இன்று திங்கட்கிழமை, பிரதமர் துறை பணியாளர்களின் மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றுகையில் அன்வார் இதனை தெரிவித்தார்.
சீனாவின் 4 நாள் அதிகாரத்துவ வருகையை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பிய பிரதமர், சீன பயணம் குறித்து அரசு பணியாளர்களுடன் பகிர்ந்துக்கொண்டார். மொத்தம் 17 கோடி வெள்ளி மதிப்புள்ள முதலீடுகள் தொடர்பில் சீனாவுடன் மலேசியா கையெழுத்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய செய்திகள்
சீனாவின் முன்னணி நிறுவனம், மலேசியாவைப் பிராந்திய மையமாக உருவாக்க ஒப்புக்கொண்டுள்ளது
Related News

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு

எச் ரக வாகனப் பதிவு எண்கள் ஏலம்… 91.21 மில்லியன் ரிங்கிட் வசூல்


