Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கெட்டமின் வகை போதைப் பொருள் கடத்த முயற்சி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கெட்டமின் வகை போதைப் பொருள் கடத்த முயற்சி

கோலாலம்புர், டிச.6-

கோலாலம்புர் அனைத்துலக விமான நிலையத்தில் 31.09 கிலோ எடை கொண்ட கெட்டமின் வகை போதைப் பொருள் கடத்த முயற்சி செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கடத்தலின் மதிப்பு சுமார் 1.56 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கைது குறித்து தகவல் அளித்த மத்திய வட்டார சுங்கத் துறையின் துணை இயக்குநர் Norlela Ismail தெரிவிக்கயில், இரண்டு வெவ்வேறு நாட்களில், இரண்டு வெவ்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் இருவரும் மலேசியர்கள் எனவும் குறிப்பிட்டார்.

கடத்தப்பட்டப் போதைப் பொருட்கள் உணவுகள், பானங்கள் கொண்ட பெட்டிகளில் மறைக்கப்பட்டிருந்தன. கடத்தப்பட்ட பொருட்களை "checked baggage" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது மருந்துப் பொருள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு இதற்காக மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →