ஜோகூர் பாரு, டிசம்பர்.10-
ஜோகூர், பாசீர் கூடாங்கில் சிறுவன் ஒருவன், எரிவாயு கலன் இடுக்குகளில் இரு கால்களும் சிக்கிக் கொண்டு பெரும் அவதிக்குள்ளாகினான். இந்தச் சம்பவம் கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந்தது.
சிறுவன் எரிவாயு கலன் மீது உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்த போது, அவனது இரு கால்களும் எதிர்பாராமல் இடுக்குகளில் சிக்கிக் கொண்டன. அவனை மீட்கும் முயற்சியில் தோல்விக் கண்ட பெற்றோர், பின்னர் தீயணைப்பு மீட்புப்படையினரின் உதவியை நாடினர்.
பாசீர் கூடாங் தீயணைப்பு நிலையத்திலிருந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள், சிறுவனின் கால்களை எரிவாயு கலனிலிருந்து மீட்பதற்கு சுமார் பத்து நிமிடம் கடுமையாகக் போராடினர். சிறுவனை வீரர்கள் மீட்கும் காட்சியைக் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.








