இந்தோனேசியாவில் ஏற்பட்ட காட்டுத்தீக்கு, மலேசிய தோட்ட நிறுவனங்களே காரணம் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தோட்டத்துறை மற்றும் மூலப்பொருள் அமைச்சுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டதாக நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, வெளிநாடுகளில் செயல்படும் நிறுவனங்களால் ஏற்படும் காட்டுத்தீப் புகையைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும், சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் அமைச்சு விளக்கமளித்துள்ளது.








