Nov 26, 2026
Thisaigal NewsYouTube

முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோனி தாமசுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற்றார் நஜிப்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோனி தாமசுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற்றார் நஜிப்

முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டான் ஶ்ரீ டோனி தாமசுக்கு எதிராகத் தொடர்ந்த 1.9 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரிய இறுதி மேல்முறையீட்டு மனுவை, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் திரும்பப் பெற்றுள்ளார்.

இதன் மூலம் ஆறு ஆண்டுகளாக நீடித்த சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

கூட்டரசு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது, முக்கியமான மற்ற விவகாரங்களில் கவனம் செலுத்த விரும்புவதால் மேல்முறையீட்டைத் தொடர வேண்டாம் என நஜிப் முடிவு செய்துள்ளதாக அவரது வழக்கறிஞர் ஃபிரோஸ் ஹுசேன் அஹ்மாட் ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இருதரப்பு வழக்கறிஞர்களும் 10 ஆயிரம் ரிங்கிட் வழக்குச் செலவை நஜிப் செலுத்த ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, நீதிபதி டத்தோ ஶ்ரீ ஹாஷிம் ஹம்ஸா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அவரது மனுவைத் தள்ளுபடி செய்தது.

கடந்த 2020-ஆம் ஆண்டு, 1எம்டிபி மற்றும் IPIC வழக்குகளில் தமக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த டோனி தாமஸ் மீது அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து நஜிப் இந்த வழக்கைத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
இராணுவ விமானத்தின் மூலம் 156 மில்லியன் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் கடத்தல்: நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் தகவல்

இராணுவ விமானத்தின் மூலம் 156 மில்லியன் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் கடத்தல்: நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் தகவல்

விமானிகளின் மனநலத்தைப் பாதுகாக்க தேசிய அளவிலான திட்டம் - போக்குவரத்து அமைச்சு தகவல்

விமானிகளின் மனநலத்தைப் பாதுகாக்க தேசிய அளவிலான திட்டம் - போக்குவரத்து அமைச்சு தகவல்

இந்தோனேசிய காட்டுத்தீக்கு மலேசிய நிறுவனங்கள் காரணமா? - ஆதாரங்கள் இல்லை என நாடாளுமன்றத்தில் தகவல்

இந்தோனேசிய காட்டுத்தீக்கு மலேசிய நிறுவனங்கள் காரணமா? - ஆதாரங்கள் இல்லை என நாடாளுமன்றத்தில் தகவல்

தரமற்ற இறக்குமதிப் பொருட்களுக்கு விரைவில் கடும் கட்டுபாடு - அமைச்சர் ஜொஹாரி தகவல்

தரமற்ற இறக்குமதிப் பொருட்களுக்கு விரைவில் கடும் கட்டுபாடு - அமைச்சர் ஜொஹாரி தகவல்

போலீசாரின் பணிச் சுமை அதிகரிப்பு: ஒரு அதிகாரி 1000 வழக்குகளைக் கையாளும் நிலை

போலீசாரின் பணிச் சுமை அதிகரிப்பு: ஒரு அதிகாரி 1000 வழக்குகளைக் கையாளும் நிலை

அடுத்த பொதுத்தேர்தலுக்குப் பிறகும் பிரதமர் பதவியில் தொடர அன்வார் விருப்பம்

அடுத்த பொதுத்தேர்தலுக்குப் பிறகும் பிரதமர் பதவியில் தொடர அன்வார் விருப்பம்