Nov 26, 2026
Thisaigal NewsYouTube

அடுத்த பொதுத்தேர்தலுக்குப் பிறகும் பிரதமர் பதவியில் தொடர அன்வார் விருப்பம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அடுத்த பொதுத்தேர்தலுக்குப் பிறகும் பிரதமர் பதவியில் தொடர அன்வார் விருப்பம்

அடுத்த பொதுத்தேர்தலுக்குப் பிறகும் வாய்ப்பு கிடைத்தால் மேலும் ஒரு தவணை பிரதமராகத் தொடர விரும்புவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு ஆர்டிஎம் தொலைக்காட்சியின் ‘டியாலோக் நெகாரா’ நிகழ்ச்சியில் பேசிய அவர், மலேசியா மேலும் வளர்ச்சியடையும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும், இளைஞர்கள் நாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

மேலும், மலேசியா, உலக அளவிலும், வட்டாரங்களிலும் வலிமையான நாடாக உயர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, 16-வது பொதுத்தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்து மக்கள் பொறுமை காக்க வேண்டும் என அன்வார் கேட்டுக் கொண்டார்.

அடுத்த பொதுத்தேர்தல் நடத்துவதற்கான காலக்கெடு 2028-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் வரை இருப்பதையும் அன்வார் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →