Nov 26, 2026
Thisaigal NewsYouTube

போலீசாரின் பணிச் சுமை அதிகரிப்பு: ஒரு அதிகாரி 1000 வழக்குகளைக் கையாளும் நிலை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போலீசாரின் பணிச் சுமை அதிகரிப்பு: ஒரு அதிகாரி 1000 வழக்குகளைக் கையாளும் நிலை

நாட்டில் பாலியல் வன்முறை உள்ளிட்ட சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளைக் கையாள, நாடு முழுவதும் 30 போலீசார் மட்டுமே இருப்பதாக புக்கிட் அமான் D11 பிரிவின் முதன்மை உதவி இயக்குநர் சித்தி கம்சியா ஹசான் தெரிவித்துள்ளார்.

இதனால் ஒவ்வொரு அதிகாரியும் 1,000-க்கும் அதிகமான வழக்குகளைக் கையாள வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான அனைத்துலக தின நிகழ்ச்சியில் உரையாற்றிய சித்தி கம்சியா ஹசான், பாலியல் வன்முறை மற்றும் இணையவழி சுரண்டல் குற்றங்கள் மேலும் சிக்கலாகி வருவதால், உளவியலாளர்கள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் சட்டத்துறை வல்லுநர்கள் அடங்கிய சிறப்புக் குழுக்கள் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ஆலோசனை மற்றும் பாதுகாப்பான தங்குமிடங்களை வழங்க சமூக நலத்துறை, மருத்துவமனைகள், அரசு சாரா அமைப்புகளுடன் போலீசார் இணைந்து செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை மீண்டும் மீண்டும் விவரிப்பதைக் கேட்கும் விசாரணை அதிகாரிகளும் மனரீதியாகப் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →