Sep 15, 2026
Thisaigal NewsYouTube
எஸ்பிஎம் தேர்வு அட்டவணை இன்று மாலை வெளியாகும் – கல்வி அமைச்சரின் ஒப்புதலுக்காக காத்திருப்பு
தற்போதைய செய்திகள்

எஸ்பிஎம் தேர்வு அட்டவணை இன்று மாலை வெளியாகும் – கல்வி அமைச்சரின் ஒப்புதலுக்காக காத்திருப்பு

Share:

2026-ஆம் ஆண்டிற்கான எஸ்பிஎம் தேர்வு அட்டவணையானது, கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக்-இன் ஒப்புதலைப் பெற்ற பின்னர் இன்று மாலை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எஸ்பிஎம் தேர்வு அட்டவணையில் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தேர்வுக் குழுவின் துணை இயக்குநர் இன்று அமைச்சரிடம் சமர்ப்பித்து, பரிசீலனை மற்றும் ஒப்புதலைப் பெறவுள்ளதாக கல்வித் துறைத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முஹம்மட் அஸாம் ஹமட் தெரிவித்துள்ளார்.

எந்தப் பிரச்சினையும் இல்லாவிட்டால், அட்டவணை இன்று மாலையே வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வடகிழக்கு பருவமழை, இவ்வாண்டின் இறுதியில் ஏற்படக்கூடிய புகைமூட்டம் மற்றும் பள்ளி விடுமுறைக் காலம் உள்ளிட்ட காரணிகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக முஹம்மட் அஸாம் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மாநில கல்வித்துறையான ஜே.பி.என் , மாவட்டக் கல்வி அலுவலகமாக பி.பி.டி, பள்ளிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்வு அட்டவணை அமைக்கப்படுவதை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் விவரித்துள்ளார்.

Related News

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்