Sep 12, 2026
Thisaigal NewsYouTube
16-வது பொதுத்தேர்தல் வரை ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்வோம் - பாரிசான் நேஷனல் திட்டவட்ட அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

16-வது பொதுத்தேர்தல் வரை ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்வோம் - பாரிசான் நேஷனல் திட்டவட்ட அறிவிப்பு

Share:

அரசாங்கத்தின் தற்போதைய நாடாளுமன்ற பதவிக்காலம் முடியும் வரை, ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோவும் பாரிசான் நேஷனலும் தங்களது பொறுப்புகளைத் தொடர்ந்து நிறைவேற்றும் என அம்னோ உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமது காலித் நோர்டின் தெரிவித்துள்ளார்.

அரசியல் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காகவே, பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க பாரிசான் ஒப்புக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சபா, ஜோகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பக்காத்தான் ஹராப்பானுக்கு எதிராக போட்டியிட்ட போதிலும், அந்த முடிவுகளை ஒற்றுமை அரசாங்கத்தின் ஒத்துழைப்பில் இருந்து விலகுவதற்கான காரணமாக பாரிசான் நேஷனல் கருதவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாநில அளவில் அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் கூட, கூட்டரசு மட்டத்தில் நல்ல ஒத்துழைப்பை தொடர முடியும் என்றும் முகமது காலித் நோர்டின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

16-வது பொதுத்தேர்தலானது முக்கிய அரசியல் முடிவுக்கான அடுத்தக்கட்ட தருணமாக இருக்கும் என்றும், அதுவரை பக்காத்தான் ஹராப்பானுடனான கூட்டரசு ஒத்துழைப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி