Sep 6, 2026
Thisaigal NewsYouTube
2027 வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் வருமானத்தை உயர்த்துவே முக்கிய இலக்கு - நிதியமைச்சு தகவல்
தற்போதைய செய்திகள்

2027 வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் வருமானத்தை உயர்த்துவே முக்கிய இலக்கு - நிதியமைச்சு தகவல்

Share:

நாட்டின் 2027-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டமானது, மக்களின் வருமானத்தை உயர்த்துதல், தரமான வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் மற்றும் மூலோபாய முதலீடுகள் மூலம் மலேசியாவின் பொருளாதார போட்டித்திறனை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்துள்ளார்.

இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூன்று முக்கிய முன்னுரிமைகளாக “உச்சத்தை உயர்த்துதல், அடித்தளத்தை வலுப்படுத்துதல், நல்ல நிர்வாகத்தை நிலைப்படுத்துதல்” ஆகியவை அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், செமிகண்டக்டர், எரிசக்தி மாற்றம், டிஜிட்டல் பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு மற்றும் இஸ்லாமிய நிதி உள்ளிட்ட துறைகளுக்கு அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை வழங்கும் என்றும், 2027-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டமானது அக்டோபர் 9-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உயர்தர முதலீடுகளை ஈர்த்தல், உற்பத்தித்திறனை அதிகரித்தல் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்குதல் ஆகிய நடவடிக்கைகளின் மூலம் மலேசியத் தயாரிப்புகளை உலகளாவிய சந்தையை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமீர் ஹம்சா அசிசான் உறுதியளித்துள்ளார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து