Jul 31, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நோயாளிகளிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்ட மருத்துவர்

Share:

மெங்லெம்பு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவரை பேரா மாநில சுகாதார துறை (JKN), கண்டித்துள்ளது.

சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்வதுடன் குழந்தைகளை 'ஏக்கோர் எனும் சொல் பயன்படுத்தி அழைத்த அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 6 ஆம் தேதி மருத்துவமனைக்கு உடல்நலமின்றி வந்த குழந்தையிடம் மருத்துவ அதிகாரி சிகிச்சை அளித்த விதம், மரியாதை இன்றி பேசியதாக புகார் பெறபட்டதாக மாநில சுகாதார தலைவர் டாக்டர் சிராஜுடின் ஹஷிம் தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட மருத்துவரை கண்டித்ததாகவும் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் மரியாதையாக நடந்து கொள்வதுடன், இனி இத்தகைய தவறு நடந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை படுத்தபட்டதாக அறிக்கை ஒன்றில் அவர் வெளியிட்டிருந்தார்.

Related News