Jul 31, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இவ்வாண்டு டுரியான் சந்தையில் நல்ல கிராக்கி

Share:

டுரியான் பருவக் காலம் வழக்கமாக ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் முடிவடைந்து விடும்.

ஆனால், மே மாதம் முதல் தனது பழத்தோட்டத்தில் இடைவிடாமல் பழங்களை அறுவடை செய்து வருவதாக ஜொகூர், குலாய்- யை சேர்ந்த ஹன் சிங் கியான் தெரிவித்தார்.

குறிப்பிட்ட அளவிலேயே தோட்டத்தில் பழங்கள் கிடைப்பதால் அதிக லாபம் காணமுடியாது.

இருந்தபோதிலும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல ஒரு வேட்டை என்றே சொல்லலாம். மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சந்தையில் ஆங்காங்கே டுரியான்களை காண முடியும்.

இவ்வருடம் மே தொடங்கி டுரியானை அதிகளவில் அறுவடை செய்து விற்று வருகிறேன் என்றார் 47 வயதுடைய ஹன் சிங் கியான்.

கடந்த ஆண்டினை ஒப்பீடுகையில் இவ்வாண்டு நன்றாகவே தோட்டத்தில் விளைந்த பழங்கள் வியாபாரம் ஆகியதாகவும் நல்ல இலாபத்தை கண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Related News