அரசாங்கத்தின் சும்பாங்கன் துணாய் ரஹ்மஹ் எனும் ரொக்க உதவித் தொகையை பெற்று வருகின்ற 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை மக்கள் , வரும் திங்கட்கிழமை முதல் தலா 600 வெள்ளி மதிப்பிலான பொருள் உதவியை பெறுவர் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
அடிப்படை அத்தியாவசிய உணவுப்பொருட்களை உள்ளடக்கிய 600 வெள்ளிக்குரிய பொருட்கள் சும்பாங்கன்அஸஸ் ரஹ்மஹ் திட்டத்தின் வாயிலாக வழங்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் இந்த உதவிகள் வழங்கப்படவிருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


