கோலாலம்பூர், டிசம்பர்.29-
கோலாலம்பூரிலிருந்து புருணை நோக்கிச் சென்ற ஏர்ஏசியா விமானம், கேபின் அழுத்தத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கோத்தா கினபாலு விமான நிலையத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது.
கடந்த சனிக்கிழமை, மதியம் 1.45 மணியளவில், ஏர்ஏசியா AK278 என்ற விமானம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புருணை நோக்கிப் புறப்பட்டது.
ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கேபின் அழுத்தத்தில் மாற்றம் இருப்பதை விமானிகள் கண்டறிந்தனர்.
இதனையடுத்து, பாதுகாப்பு கருதி, விமானம் உடனடியாகக் கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது.
இந்நிலையில் விமானம் கோத்தா கினபாலுவில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் எவ்வித பாதிப்பும் இன்றி பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.








