Jun 29, 2026
Thisaigal NewsYouTube
"நாட்டை விட்டு தப்பியோடவில்லை – ஐஜிபியைச் சந்தித்து விசாரணைக்கு ஒத்துழைப்பேன்"-  ஸம்ரி வினோத் தகவல்
தற்போதைய செய்திகள்

"நாட்டை விட்டு தப்பியோடவில்லை – ஐஜிபியைச் சந்தித்து விசாரணைக்கு ஒத்துழைப்பேன்"- ஸம்ரி வினோத் தகவல்

Share:

கோலாலம்பூர், மார்ச்.14-

வன்முறையைத் தூண்டும் கருத்துக்களைக் கூறியதற்காக நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு மத்தியில், தாம் நாட்டை விட்டுத் தப்பிச் சென்று விட்டதாகக் பரவும் தகவலை சமய போதகர் ஸம்ரி வினோத் மறுத்துள்ளார்.

இன்று சனிக்கிழமை, ஸம்ரி வெளியிட்டுள்ள முகநூல் பதிவு ஒன்றில், நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல தமக்கு எந்த ஒரு காரணமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும், அவசியம் ஏற்பட்டால், மலேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயிலை நேரில் சந்திக்கத் தயார் என்றும் ஸம்ரி குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், தீ வைப்பு மற்றும் வீடுகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்களில் தன்னைக் குறி வைத்து தாக்குதல் நடத்துவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வன்முறையைத் தூண்டியதாகக் குற்றச்சாட்டு உள்ள பலர் மீது, இது போன்ற நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை என்றும், அவர்கள் மீதும் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் ஸம்ரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று இரவு காலிட் இஸ்மாயில் வெளியிட்ட தகவலில், ஸம்ரி வினோத்தும், தமிம் டாஹ்ரியும் தாய்லாந்திற்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு