கோலாலம்பூர், டிசம்பர்.12-
Daesh தீவிரவாதக் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்த வங்காளதேச ஆடவர் ஒருவருக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
ஓர் உணவகப் பணியாளரான 29 வயது முகமட் டிடாருல் அலாம் என்ற அந்த வங்காளதேச ஆடவர், கைது செய்யப்பட்ட தினமான கடந்த ஜுலை 21 ஆம் தேதி முதல் தண்டனை அமலுக்கு வருவதாக நீதிபதி அஸாஹார் அப்துல் ஹாமிட் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட ஆடவர் முகநூல் வாயிலாக தீவிரவாதக் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.








