Jul 29, 2026
Thisaigal NewsYouTube
EPF மூன்றாம் கணக்கிற்கு 11.52 பில்லியன் வெள்ளி மாற்றப்பட்டுள்ளது.
தற்போதைய செய்திகள்

EPF மூன்றாம் கணக்கிற்கு 11.52 பில்லியன் வெள்ளி மாற்றப்பட்டுள்ளது.

Share:

கோலாலம்பூர், ஜூலை 10-

ஊழியர் சேமநிதி வாரியம் - EPF-ப்பில் பதிவு பெற்றுள்ள 55 வயதுக்கும் குறைவான 13.01 மில்லியன் சந்தாதாரர்களில், 27.8 விழுக்காட்டினர் அதாவது 3.61 மில்லியன் பேர், கடந்த ஜூன் 24ஆம் தேதி வரையில் மொத்தம் 11.52 பில்லியன் தொகையை, தத்தம் மூன்றாம் கணக்கிற்கு மாற்றம் செய்துள்ளனர்.

அவர்களில், சுமார் 3.16 மில்லியன் சந்தாதாரர்கள், மூன்றாம் கணக்கின் வாயிலாக, மொத்தம் 7.81 பில்லியன் வெள்ளியை மீட்டுக்கொண்டுள்ளதாக, நாடாளுமன்றத்தின் அகப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள எழுத்துப்பூர்வ பதிலில் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

நடப்பில், பல்வேறு நிதி சார்ந்த சவால்களை எதிர்நோக்கிவரும் மக்கள், அவர்களது சேமிப்பு நிதியை மீட்டுக்கொள்வதற்கு ஏதுவாக, அரசாங்கம் அந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்