Sep 27, 2026
Thisaigal NewsYouTube
குனோங் கினபாலு மலையில் உறைபனி: சுற்றுலாப் பயணிகள் வியப்பு
தற்போதைய செய்திகள்

குனோங் கினபாலு மலையில் உறைபனி: சுற்றுலாப் பயணிகள் வியப்பு

Share:

சபாவின் புகழ்பெற்ற குனோங் கினபாலு மலையில் நிலவும் கடும் குளிரால், கடல் மட்டத்திலிருந்து 3,272 மீட்டர் உயரத்தில் உள்ள பனாலபன் பகுதியில் இன்று அதிகாலை உறைபனி உருவானது.

வறண்ட வானிலை மற்றும் கடும் வெப்பநிலை குறைவு காரணமாகத் தாவரங்களின் மீது மெல்லிய பனிப்படலங்கள் படர்ந்துள்ள அரிய காட்சி சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

எனினும், நிலவும் கடும் குளிரிலிருந்து தற்காத்துக்கொள்ளப் போதுமான கம்பளி உடைகளை அணியுமாறும், பாதுகாப்பு அதிகாரிகளின் வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறும் மலையேறுபவர்களுக்குச் சபா பூங்காக்கள் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மலையேற்றத்தின் போது உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளுமாறும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்