கோத்தா கினபாலு, செப்டம்பர்.12-
சபாவில் நேற்று ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, 400-க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை இரவு பெனம்பாங்கில் 255 பேரும், Beaufort-ல் 154 பேரும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர் என அம்மாநில பேரிடர் மேலாண்மைக் குழு இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அதே வேளையில், இவ்வெள்ளத்தால் 22 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், வெள்ளத்தில் சிக்கி காணமல் போன சிலரைத் தேடும் பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாகவும் பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.








