கோலாலம்பூர், செப்டம்பர்.13-
நாட்டின் பொருளாதார அமைச்சராகத் தாம் பொறுப்பேற்று இருந்த போது தமது மாத வருமானம் 29 ஆயிரம் ரிங்கிட் என்று பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி இன்று அம்பலப்படுத்தினார். அதே வேளையில் பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தமக்கு மாத வருமானம் ஏழாயிரம் ரிங்கிட்டாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஒட்டு மொத்தத்தில் மடானி அரசாங்கத்தில் தமது மொத்த மாத வருமானம் 36 ஆயிரம் ரிங்கிட்டாகும் என்று ரஃபிஸி ரம்லி இன்று மனம் திறந்தார்.








