Jul 28, 2026
Thisaigal NewsYouTube
அம்புலன்ஸ் வண்டியின் நெருக்கத்தில் அமைச்சர் வண்டியா?
தற்போதைய செய்திகள்

அம்புலன்ஸ் வண்டியின் நெருக்கத்தில் அமைச்சர் வண்டியா?

Share:

ஈப்போ,பிப்.8
அண்மையில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் சிம்பாங் பூலாய்க்கும் தாப்பாவிற்கும் இடையில் நிகழ்ந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு விரைந்த அம்புலன்ஸ் வண்டிக்கு மிக நெருக்கமாக பின் தொடர்ந்து சென்ற அமைச்சர் ஒருவரின் அதிகாரப்பூர்வ வாகனம் தொடர்பில் பின்னர் விளக்கம் அளிப்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

அம்புலன்ஸ் வண்டியுடன் மிக நெருக்கமாக சென்ற அமைச்சர் ஒருவரின் அதிகாரப்பூர்வ வாகனம் தொடர்பில் அந்த அமைச்சர் யார் என்பதை அந்தோணி லோக் அம்பலப்படுத்த வேண்டும் என்று மசீச. இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் சொங் யு சுவான் அண்மையில் கோரிக்கை விடுத்து இருந்தார்.

சட்டத்தை மீறிய செயலில் ஈடுபடும் யாரையும் ஒற்றுமை அரசாங்கம் தற்காக்காது என்பது உண்மையானால் அந்த அமைச்சரின் பெயர் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று சொங் யு சுவான் சவால் விடுத்திருந்தார்.

Related News

அம்புலன்ஸ் வண்டியின் நெருக்கத்தில் அமைச்சர் வண்டியா? | Thisaigal News