Sep 26, 2026
Thisaigal NewsYouTube
இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்
தற்போதைய செய்திகள்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

Share:

சேமிப்பு என்பது இன்றைய, நாளைய அல்லது நாளைய மறுநாள் தேவைக்கானது அல்ல; அது எதிர்காலப் பாதுகாப்பு!" என்கிறார் பிஎஸ்என் குலுக்கலில் 10 லட்சம் ரிங்கிட் வென்று சாதனை படைத்துள்ள பினாங்கு வரலாற்று ஆசிரியர் முனீஸ்வரன் மணியம். 1989-ஆம் ஆண்டு முதல், தமது பணி ஓய்வுக்குப் பிந்தைய தேவையை மட்டுமே இலக்காகக் கொண்டு, அடுத்த 30 ஆண்டுகாலத் தொலைநோக்குப் பார்வையோடு அவர் சேமிக்கத் தொடங்கியதே இந்த மெகா வெற்றிக்குக் காரணம் என நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.

பரிசுத் தொகை கிடைத்த பிறகும், கார் வாங்கும் ஆசை இருந்தாலும், அதனை மீண்டும் சேமிப்பிலேயே முதலீடு செய்யத் துணிந்துள்ளார் இந்த 56 வயது ஆசிரியர். மாதாந்திர நேரலைகளைத் தவறாமல் பார்த்து, பிஎஸ்என் அதிகாரியின் ஊக்கத்தோடு சாதித்த முனீஸ்வரனின் இந்த நீண்டகாலத் திட்டமிடல், இன்றைய தலைமுறைக்கு ஒரு மிகச்சிறந்த சேமிப்புப் பாடமாகும்.

Related News