Sep 26, 2026
Thisaigal NewsYouTube
அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்
தற்போதைய செய்திகள்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

Share:

அலோர் ஸ்டார், மே.18-

கெடா மாநிலம், அலோ ஸ்டார், ஜாலான் தித்தி காஜா அருகே உள்ள உணவகம் ஒன்றின் முன், நேற்று இரவு நிகழ்ந்த கத்திக் குத்துச் சம்பவத்தில் பெண் ஒருவர் கழுத்தில் பலத்த காயமடைந்ததார்.

35 வயதான அப்பெண், தனது மஸ்டா காரில், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த போது, அவர் அருகில் பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்த 32 வயதுடைய சந்தேக நபர், அவரது கழுத்தின் வலது பக்கத்தில் கத்தியால் குத்தியதாக நம்பப்படுகின்றது.

இத்தாக்குதலுக்குப் பிறகு அந்த சந்தேக நபர் தப்பிச் சென்றதாகவும், அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் சையிட் பஸ்ரி சையிட் அலி தெரிவித்துள்ளார்.

காயமடைந்த பெண் அலோர் ஸ்டார் சுல்தானா பஹியா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.

தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Related News