Oct 14, 2026
Thisaigal NewsYouTube

தூக்கு மேடையிலிருந்து பன்னீர் செல்வத்தைக் காப்பாற்ற, ஆசியானின் தலைவர் என்ற அந்தஸ்தைப் பயன்படுத்துவீர் மலேசியாவிற்கு ALIRAN அமைப்பு கோரிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக ஒரு மலேசியரான பன்னீர் செல்வம் பரந்தாமன், நாளை பிப்ரவரி 20 ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலையில் சிங்கப்பூர், சாங்கி சிறைச்சாலையில் தூக்கிலிடப்படுவது உறுதியாகியுள்ளது.

இன்னும் 17 மணி நேரமே எஞ்சியிருக்கும் வேளையில் 30 வயது மதிக்கத்தக்க பன்னீர் செல்வத்தை தூக்கு மேடையிலிருந்து காப்பாற்ற, மலேசியா, தனது ஆசியான் தலைவர் அந்தஸ்தை பயன்படுத்த வேண்டும் என்று தேசிய விழிப்புணர்வு இயக்கமான ALIRAN கோரிக்கை விடுத்துள்ளது.

2025 ஆம் ஆண்டின் ஆசியான் தலைவர் என்ற முறையில் மலேசியா, பன்னீர் செல்வத்தின் தூக்குத் தண்டனையைச் சிறைத் தண்டனையாக மாற்றும்படி தென்கிழக்காசிய கூட்டமைப்பின் ஓர் உறுப்பு நாடான சிங்கப்பூருக்கு கோரிக்கை விடுக்க வேண்டும் என்று Aliran கேட்டுக்கொண்டது.

பரஸ்பர உறவு, இருவழி ஒத்துழைப்பு, கருத்திணக்க ஒப்பந்தம் என்று அதிகமாகப் பேசும் நாம், விலை மதிக்க முடியாத ஓர் உயிருக்காக, அந்த நட்புறவை பயன்படுத்தி, மனித நேய அடிப்படையில் ஒருவரின் தூக்குத் தண்டனையை சிறைத் தண்டனையாக மாற்றுவதற்கு கோரிக்கை விடுப்பதில் தவறியில்லை.

பன்னீர் செல்வத்தின் தூக்குத் தண்டனையை மறுபரிசீலனை செய்யக்கோரி, மலேசியா, ஆசியான் தலைவர் அந்தஸ்தை பயன்படுத்துவதுடன், தனது அரச தந்திர உறவையும் பயன்படுத்த வேண்டும் என்று Aliran இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

மலேசியாவில் தூக்குத் தண்டனை அகற்றப்பட்ட நிலையில், ஒவ்வோர் உயிரும், இரண்டாவது வாய்ப்பைப் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளது.

அந்த வகையில் பன்னீர் செல்வத்தின் உயிருக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று சிங்கப்பூரை கேட்டுக்கொள்வதில் மலேசியா உடனடியாக தலையிட வேண்டும் என்று Aliran வலியுறுத்தியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் கல்விப் பயிற்சி! – துணைக் கல்வி அமைச்சர்

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் கல்விப் பயிற்சி! – துணைக் கல்வி அமைச்சர்

ஊழல் செய்பவர்கள்தான் பதவி விலக வேண்டும்; நல்ல தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும்!’ – அந்தோணி லோக்கிற்கு அன்வார் பகிரங்க ஆதரவு

ஊழல் செய்பவர்கள்தான் பதவி விலக வேண்டும்; நல்ல தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும்!’ – அந்தோணி லோக்கிற்கு அன்வார் பகிரங்க ஆதரவு

தீபாவளிக்கு முன்பாக 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி! அந்தோணி லோக் உறுதி

தீபாவளிக்கு முன்பாக 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி! அந்தோணி லோக் உறுதி

8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த மித்ரா 9 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் நிதி ஒதுக்கீடு

8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த மித்ரா 9 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் நிதி ஒதுக்கீடு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்