Apr 1, 2026
Thisaigal NewsYouTube
எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்
தற்போதைய செய்திகள்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

Share:

உலகளாவிய எரிபொருள் நெருக்கடி மற்றும் மத்திய கிழக்கு மோதல்கள் குறித்த அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களை ஒருங்கிணைக்கப் புதிய கட்டுப்பாட்டு மையம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அரசாங்க தொடர்பாளர் டத்தோ பாஹ்மி பாட்ஸில் தெரிவித்துள்ளார்.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் தலைமையில், நாளை முதல் தினமும் மாலை 4 மணியளவில் இந்த மையம் சார்பில் செய்தியாளர் சந்திப்புகள் நடைபெறும் என்று இங்கு அங்காசாபூரியில் அமைச்சரவைக்கு பிந்திய வாராந்திர கூட்டத்தில் பேசுகையில் பாஹ்மி இதனை தெரிவித்தார்.

எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதாரத் தாக்கம் குறித்து விவாதிக்கப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை ஏப்ரல் 2 ஆம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்களையும் சந்திக்க உள்ளார்.

அதேவேளையில் இந்த ஆண்டு பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ள அனைத்து ஆசியான் உச்சிமாநாடுகளும் இணையவழியில் மட்டுமே நடைபெறும் என்று அவர் உறுதிப்படுத்தினார்.

மேலும் ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் பெட்ரோனாஸ் கப்பல்களுக்கு மலேசியா எந்தவொரு டோல் கட்டணமும் செலுத்தவில்லை என்பதையும் தொடர்புதுறை அமைச்சரான பாஹ்மி தெளிவுபடுத்தினார்.

Related News