Jun 30, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்
தற்போதைய செய்திகள்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

Share:

சிலாங்கூர், சுங்கை பெசார், சுங்கை பாஞ்சாங் அருகே இன்று மதியம் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் சிக்கி இளம் குடும்பத் தலைவர் ஒருவர் உயிரிழந்தார். அவரது மனைவியும் குழந்தையும் காயமடைந்தனர்.

மதியம் 1.25 மணியளவில் காம்போங் பெலியா 2 பகுதியில் சென்றுகொண்டிருந்த புரோட்டோன் சாகா ரக கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது 30 வயது மதிக்கத்தக்க மனைவி படுகாயமடைந்தார்; அவர்களது இரண்டு வயது பெண் குழந்தை சொற்ப காயங்களுடன் உயிர் தப்பியது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களின் உடல்களை மீட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகச் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

Related News