Apr 1, 2026
Thisaigal NewsYouTube
பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை
தற்போதைய செய்திகள்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

Share:

பகாங், பெந்தோங், தாமான் ஓர்க்கிட் பகுதியில் வசித்து வந்த 41 வயது மதிக்கத்தக்க ஓர் இந்திய மாது மற்றும் அவரது ஐந்து பிள்ளைகள் கடந்த திங்கட்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாகப் பெந்தோங் மாவட்ட போலீஸ் துறை தெரிவித்துள்ளது.

காணாமல் போன மாது எம். ரேகா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடன் 4 வயது முதல் 19 வயது வரையிலான அவரது ஐந்து பிள்ளைகளும் மர்மமான முறையில் மாயமாகியுள்ளனர். இச்சம்பவம் குறித்து ரேகாவின் 43 வயது கணவர் அளித்த புகாரின் அடிப்படையில், பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சாய்ஹாம் முகமது கஹார் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை காலை 6.30 மணியளவில் தனது மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர், அவர்களைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அன்று இரவு 7.34 மணியளவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தக் குடும்பத்தைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கோ அல்லது பெந்தோங் மாவட்டத் தலைமையகக் கட்டுப்பாட்டு அறைக்கோ 09-2231999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு சாய்ஹாம் முகமது கஹார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News