பினாங்கு,ஜூலை 27-
பினாங்கு மாநில அளவிலான ஒவ்வொரு திட்டமும் மக்களுக்கு வளப்பம் மற்றும் நல்வாழ்வை உருவாக்கக்கூடிய பல்வேறு இனங்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்று மாநில ஆளுநர் Tun Ahmad Fuzi Abdul Razak கேட்டுக்கொண்டார்.
வெவ்வேறான மொழிகள், மக்கள் தொகை விகிதம், இன்றைய தலைமுறையினர் என பொதிந்துள்ள பல்வேறு இனம், சமயம், கலாச்சார பன்முகத்தன்மைகள், எவ்வித இடைவெளியின்றி கொண்டாடப்பட வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் ஒவ்வொருவரும் மற்றவர்களின் உரிமைகளை, உணர்வுகளை மதிப்பது மூலம் நமது உரிமைகளுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கப்படும் என்ற தேசத் தந்தை Tunku Abdul Rahman-னின் கூற்றுக்கு ஏற்ப பன்முகத்தன்மை கலாச்சாரங்களுடன் மக்களிடையே இயல்பான ஒற்றுமையை தொடர்ந்து கட்டிக்காக்க வேண்டும் என்று Tun Ahmad Fuzi Abdul Razak வலியுறுத்தினார்.
பினாங்கில் இன்று நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான விருதளிப்பு விழாவில் உரையாற்றுகையில் ஆளுநர் இதனை தெரிவித்தார்.








