Aug 21, 2026
Thisaigal NewsYouTube
புடு சந்தையில் மீண்டும் பெருகும் வெளிநாட்டு வியாபாரிகள்; உள்ளூர் வியாபாரிகள் கவலை
தற்போதைய செய்திகள்

புடு சந்தையில் மீண்டும் பெருகும் வெளிநாட்டு வியாபாரிகள்; உள்ளூர் வியாபாரிகள் கவலை

Share:

தலைநகர், புடு சந்தை, ஜாலான் இயூ பகுதியில் மீண்டும் வெளிநாட்டு வியாபாரிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகப் பொதுமக்களும் உள்ளூர் வியாபாரிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்த போதிலும், வங்கதேசத்தைச் சேர்ந்த வியாபாரிகள் மீண்டும் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர மளிகைப் பொருட்களை விற்கத் தொடங்கியுள்ளதாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால், பொதுமக்களுக்கு விற்கப்படும் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

குடிநுழைவுத் துறையினரும், மாநகர் மன்ற அதிகாரிகளும் இணைந்து தொடர்ச்சியான கண்காணிப்பு, அதிக அபராத விதிப்புகளை அமல்படுத்தினால் மட்டுமே இத்தகைய சட்டவிரோதச் செயல்பாடுகளை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News