காஜாங், சுங்கை சுவாவில் 14 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக 41 வயது நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஆகஸ்ட் 16ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டதாக காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் நஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 29ஆம் தேதி சுங்கை சுவாவில், குடும்பத்திற்குத் தெரிந்த நபரான அந்த சந்தேக நபர், சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது இந்தச் செயலைச் செய்துள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறை, கிளந்தானில் உள்ள ரந்தாவ் பாஞ்சாங்கில் வைத்து வேலையற்ற அந்தச் சந்தேக நபரைக் கைது செய்தது.
விசாரணையில், சந்தேக நபர் 'மெத்தாம்பேட்டமைன்' போதைப்பொருளைப் பயன்படுத்தியது தெரியவந்தது.
சந்தேக நபரை ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த சம்பவம் குற்றவியல் சட்டம் 376-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.








