இன்று அதிகாலையில், 'செனாய்-டெசாரு விரைவுச்சாலையில் டெசாருவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று பசுவின் மீது மோதி, கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
மற்றொருவர் பலத்த காயங்களுக்கு இலக்கானார்.
இந்தச் சம்பவம் குறித்த அதிகாலை சுமார் 3:10 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாகத் பாசிர் கூடாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் பொறுப்பதிகாரியும், துணைத் தீயணைப்பு கண்காணிப்பாளருமான ஃபெர்டாவுஸ் அஹமட் தெரிவித்தார்.
37 வயதுடைய இருவர் பயணித்த புரோட்டோன் சத்ரியா கார் பசுவின் மீது மோதி, பின்னர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவரில் மோதியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
வாகனத்திற்குள் சிக்கிக்கொண்டிருந்த பாதிக்கப்பட்ட நபர், சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி மீட்கப்பட்டார்; எனினும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.








