2022 ஆண்டுக்கான எஸ்.டி.பி.எம். தேர்வு முடிவுகள் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. இத்தேர்வில் 1,184 மாணவர்கள் சராசரி ஒட்டுமொத்த தரப்புள்ளியான 4.00 சி.ஜி.பி.எ வைப் பெற்று மகத்தான சாதனைப் படைத்துள்ளனர். எஸ்.டி.பி.எம். தேர்வு வரலாற்றில் அதிகமான மாணவர்கள் 4.00 சி.ஜி.பி.எ புள்ளியைப் பெற்று இருப்பது இதுவே முதல் முறையாகும் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு எஸ்.டி.பி.எம். தேர்வு முடிவுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு 4.00 சி.ஜி.பி.எ புள்ளியைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது கூடுதலாக 874 மாணவர்கள் 4.00 சி.ஜி.பி.எ புள்ளியைப் பெற்றுள்ளனர் என்று மலேசிய தேர்வு மன்றத்தின் தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர். முகமட் எக்வான் டோரிமன் தெரிவித்தார்.
4.00 சி.ஜி.பி.எ புள்ளியைப் பெற்ற 1,184 மாணவர்களில் 1,009 பேர் அல்லது 85.22 விழுக்காட்டினர் B40 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று இன்று 2022 ஆம் ஆண்டுக்கான எஸ்.டி.பி.எம். தேர்வு முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் Dr டாக்டர். முகமட் எக்வான் டோரிமன் குறிப்பிட்டார்.
தவிர 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய சி.ஜி.பி.எ புள்ளி , 2.82 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில் தேசிய சி.ஜி.பி.எ புள்ளி 2.79 ஆக பதிவாகியிருந்ததாக அவர் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டுக்கான எஸ்.டி.பி.எம். சோதனையை நாடு தழுவிய நிலையில் 41 ஆயிரத்து 701 மாணவர்கள் எழுதியிருந்தனர்.

தற்போதைய செய்திகள்
எஸ்.டி.பி.எம். தேர்வில் அதிகமான மாணவர்கள் 4.00 சி.ஜி.பி.எ புள்ளியைப் பெற்று மகத்தான சாதனை
Related News

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி


