லாஹாட் டத்து, அக்டோபர்.09-
வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர். இதர மூவர் படுகாயத்திற்கு ஆளாகினர். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் சபா, லாஹாட் டத்துவில் ஜாலான் சண்டாவ் லாஹாட் டத்து-சண்டாகானில் நிகழ்ந்தது. இதில் 41 வயது ஆடவர் மற்றும் 38, 36 வயதுடைய இரு பெண்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அதே வேளையில் 43 வயது ஆடவர் மற்றும் 40 வயது மதிக்கத்தக்க இரு பெண்கள் கடும் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு, மீட்புப் படையினர் தெரிவித்தனர்.








