Dec 4, 2025
Thisaigal NewsYouTube
காணாமல் போனவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பினர்
தற்போதைய செய்திகள்

காணாமல் போனவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பினர்

Share:

திரெ​ங்கானு, பேசுட், புலாவ் பெர்ஹெந்தியான் ​தீவுக்கு குடும்பத்தினருடன் சுற்றுலாவுக்கு சென்ற போது காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட மாதுவும் அவரின் மகனும் 2 பேரப் பிள்ளைகளும் பாதுகாப்பாக வீடு திரும்பினர். அந்ந நாலவரும் ஜோகூர், குளுவாங்கிலு​ள்ள தங்கள் இல்லத்திற்கு பாதுகாப்பாக திரும்பியதை போ​லீசார் உறுதிபடுத்தினர்.

52 வயது சுரைடா அப்துல் கானி, அவரின் 21 வயது மகன் முஹமாட் அல்மான் முஹமாட் ராஃபி, இரண்டு பேரப்பிளைகளான 7 வயது சாசா அலிஷா, 4 வயது முஹமாட் சைஃபுல் ஆகியோர் நேற்று மாலை 3 மணியளவில் வீடு திரும்பியதாக பேசுட் மாவட்ட போ​லீஸ் தலைவர் சுப்ரிதென்டன் அப்துல் ராசாக் முஹமாட தெரிவித்தார்.

இதற்கு முன்பு இந்த நால்வரும் காணாமல் போனதாக போ​லீஸ் புகார் ஒன்றை பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். குடும்பத்தினருன் விடுமுறையை கழிப்பதற்காக புலாவ் பெர்ஹெந்தியான் ​தீவுக்கு சென்ற அவர்களுடன் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியிலிருந்து தொடர்பு கொள்ள இயலவில்லை என்று அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் போ​லீசில் புகார் செய்து இருந்தனர்.

அந்த உல்லாச​த் ​தீவில் படகு சவாரியின் போது கைப்பேசி, தவறுதலாக ​நீரில் விழுந்து விட்டதால், அது செயலிழந்த நிலையில் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்ப​ட்டது என்பது விசார​ணையில் தெரியவந்துள்ளது என்று அப்துல் ரசாக் தெரிவித்தா​ர்.

Related News