மக்களுக்கான எஸ்டிஆர், சாரா உதவித் திட்டங்களுக்கு 2027ஆம் ஆண்டில் 16 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுவதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார். நடப்பாண்டில் இதற்காக 15 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டுக்கான நிதி ஒரு பில்லியன் ரிங்கிட் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எஸ்டிஆர் உதவி பெறும் அனைவருக்கும் மாதம் அதிகபட்சம் 150 ரிங்கிட் அல்லது ஆண்டுக்கு 1,800 ரிங்கிட் வரை சாரா உதவி வழங்கப்படும். இதன் மூலம் ஒன்பது மில்லியன் பேர் பயனடைவார்கள்.
மேலும், எஸ்டிஆர் பெறாத 18 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு, ஹரி ராயா நோன்புப் பெருநாளுக்கு முன்பும் மலேசியாவின் 70ஆவது தேசிய தினத்தை முன்னிட்டும் தலா 100 ரிங்கிட் வீதம் இருமுறை சாரா மடானி உதவி வழங்கப்படும். இதன் மூலம் நடுத்தர வருமானப் பிரிவினரையும் உள்ளடக்கி 13 மில்லியன் மலேசியர்கள் பயனடைவார்கள்.








