பாங்கி, செப்டம்பர்.25-
பாலஸ்தீன போராளிகள் இயக்கமான ஹமாஸ்-ஸின் மையமாக மலேசியா செயல்படுகிறது என்று கூறப்படும் குற்றச்சாட்டை துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி மறுத்துள்ளார்.
அதற்கான சாத்தியம் இல்லை என்பதுடன், அது அடிப்படையற்றச் குற்றச்சாட்டாகும் என்று அஹ்மாட் ஸாஹிட் விளக்கினார். மலேசியாவின் பாதுகாப்பு அம்சங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கு நாட்டிற்கு சொந்த சிறப்புப் படை உண்டு. அரச மலேசிய போலீஸ் படையின் சிறப்புப் பிரிவு அந்தப் பணிகளைச் செவ்வனே செய்து வருகிறது என்று அஹ்மாட் ஸாஹிட் குறிப்பிட்டார்.
ஹமாஸின் பயிற்சித் தளம் மலேசியாவில் இல்லை. பயிற்சி அளிப்பதற்கு இங்கு இடமில்லை என்று அவர் விளக்கினார்.
ஏற்கனவே இத்தகைய குற்றச்சாட்டு கூறிய போது, போலீஸ் படைத் தலைவர் வன்மையாக மறுத்து இருப்பதையும் அஹ்மாட் ஸாஹிட் சுட்டிக் காட்டினார்.








