பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழக விளையாட்டரங்கின் முன்புறம் சிலாங்கூர் - பேரா மாநில அணியின் ஆதரவாளர்கள் மத்தியில் கைகலப்பு நேர்ந்தது.
இது குறித்து தகவல் அளித்த டத்தோ உசேன் உமர் கான் கூறுகயில்,
விளையாட்டரங்கின் வாகன நிறுத்துமிடத்தில் மாலை 4.30 மணியளவில் அவ்விரு அணியினருக்கும் மத்தியில் கைகலப்பு ஏற்பட்டது எனத் தெரிவித்தார்.
அந்தக் கைகலப்பில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் 16 வயது முதக் 36 வயதுக்கு உட்பட்ட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.








