சிப்பாங், ஜூலை.14-
அறிவுக்குப் பொருந்தாதக் காரணங்களைக் கூறிய 131 அந்நிய நாட்டவர்கள், கோலாலம்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய அடுத்த சில மணி நேரங்களிலேயே அவர்களின் தாயகத்திற்குத் திருப்பி அனுப்பட்டதாக மலேசிய எல்லை பாதுகாப்பு ஏஜென்சி தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை கேஎல்ஐஏ முனையம் ஒன்றில் தரையிறங்கிய அந்த 131 பேரும், மலேசியாவில் சுமார் ஒரு மாத காலத்திற்குத் தங்குவதற்காக வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
ஒரு மாத காலத்திற்குத் தங்குவதற்கு எவ்வளவு பணம் கொண்டு வந்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு 500 மலேசிய ரிங்கிட்டைக் காட்டியது, அவர்களின் பயண நோக்கம் சந்தேகத்தை ஏற்படுத்தியதாக அந்த ஏஜென்சி இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
எங்கே தங்கப் போகிறார்கள் என்ற விவரத்தையும் கொண்டிருக்காத அந்த 131 பேரும் மறு விமானத்தில் அவர்களின் தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக அது குறிப்பிட்டுள்ளது.








