Sep 25, 2026
Thisaigal NewsYouTube
உள்ளூர் வணிகத்தை ஆக்கிரமிக்கும் வெளிநாட்டினர்; உரிமங்களை விற்கும் மலேசியர்கள்! பிரதமர் அன்வார் உத்தரவு
தற்போதைய செய்திகள்

உள்ளூர் வணிகத்தை ஆக்கிரமிக்கும் வெளிநாட்டினர்; உரிமங்களை விற்கும் மலேசியர்கள்! பிரதமர் அன்வார் உத்தரவு

Share:

வியாபார உரிமங்கள் மற்றும் விசாக்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க பிரதமர் டத்தோஸ்ரீ இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூர் வியாபார நடவடிக்கைகளை சட்டவிரோதமாகக் கைப்பற்றும் அல்லது விசாக்கள் மற்றும் உரிமங்களைத் தவறாகப் பயன்படுத்தும் உள்ளூர்வாசி அல்லது வெளிநாட்டினர் என எவராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் பணித்துள்ளார்.

வெளிநாட்டினர் உள்ளூர் வணிக நடவடிக்கைகளைக் கைப்பற்றி வருவது குறித்த புகார்களைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் அன்வார் இவிவகாரத்தைக் கொண்டு வந்ததாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

வணிக நோக்கங்களுக்காக வழங்கப்பட்ட விசா மற்றும் உரிமங்களை மலேசியக் குடிமக்கள் எவரேனும் முறைகேடாகப் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டாலும், அவர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை பாயும் என்று பிரதமர் எச்சரித்துள்ளார் என்று டத்தோ ஃபஹ்மி விளக்கினார்.

Related News