Aug 10, 2026
Thisaigal NewsYouTube
கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் சதுரங்கப் போட்டி
தற்போதைய செய்திகள்

கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் சதுரங்கப் போட்டி

Share:

சிலாங்கூர், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தலைமையில் கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதிக்கான சதுரங்கப் போட்டி 2026, நேற்று புக்கிட் ரிமாவிலுள்ள ஆஸ்டர் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கோத்தா கெமுனிங் மக்கள் சேவை மையமும், சேலஞ்சர் செஸ் அகாடமி- யும் இணைந்து ஏற்பாடு செய்த இப்போட்டியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான பெற்றோர்களும் கலந்து கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கு உற்சாகமளித்தனர்.

இந்நிகழ்வில் பேசிய கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் குழந்தைகள் மின்னணு சாதனங்களில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்த்து, சிந்தனைத் திறனை வளர்க்கும் பயனுள்ள பொழுதுபோக்குகளில் ஈடுபட வேண்டும் என்றார்.

சதுரங்கம் குழந்தைகளின் விமர்சன சிந்தனை, பொறுமை, கவனம், உத்தி வகுக்கும் திறன் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஆற்றலை மேம்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், இத்தகைய நிகழ்வுகள் மூலம் சிறுவர்களின் திறமைகளை வளர்ப்பதுடன், பெற்றோர், பிள்ளைகள் மற்றும் சமூகத்தினரிடையே நல்லுறவையும் வலுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.

சதுரங்கத் துறைக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் சங்க நிர்வாகிகள் மற்றும் ஒத்துழைப்பாளர்களுக்கும் பிரகாஷ் சம்புநாதன் நன்றி தெரிவித்தார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி