கோலாலம்பூர், நவம்பர்.03-
பவர் பேங்க் எனப்படும் கையடக்கச் சார்ஜரை திருடி விட்டார் என்பதற்காக சிறுவன் ஒருவன், சில தனிநபர்களால் தாக்கப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.
அண்மையில் கோலாலம்பூரில் உள்ள பிபிஆர் குடியிருப்புக் கட்டுமானத் தளத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் காயங்களுக்கு ஆளான 12 வயது சிறுவன் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளான்.
விசாரணைக்கு உதவும் வகையில் 49 க்கும் 61 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனிநபர்களால் தாக்கப்பட்ட சிறுவன் காயங்களுக்கு ஆளாகி கிடக்கும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.








