May 22, 2026
Thisaigal NewsYouTube
புகையை சுவாசித்ததால் மட்டுமே அந்த மூவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

புகையை சுவாசித்ததால் மட்டுமே அந்த மூவர் உயிரிழந்தனர்

Share:

பினாங்கு,ஜாலான் பாலிக் புலாவ் - வில் உள்ள ஒரு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம், எந்தவொரு குற்றச் செயலுக்குமான அறிக்குறிகள் இல்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தீ விபத்தில் வெளியேறிய புகையை சுவாசித்ததால் மட்டுமே பாதிக்கப்பட்ட மூவரும் உயிரிழந்து இருப்பது சவப்பரிசோதனையின் அறிக்கையில் தெரியவந்ததாக தென் மேற்கு மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் கமருல் ரிசல் ஜெனல் கூறினார்.

இச்சம்பவத்தில் 58 வயது நூருல் பௌஜியா, 20 வயது ரஹ்பியா ஜாஸ்மின் சைதா முகமது உட்பட 33 வயது முகமது இப்ராஹிம் உயிரிழந்து இருப்பதாக அவர் அறிவித்தார்.

அவர்களின் உடல் பாலிக் புலாவ், அத்-தக்வா மசூதி இஸ்லாமிய கல்லறை - வில் நல்லடக்கம் செய்யப்பட்டதாக கமருல் ரிசல் மேலும் விவரித்தார்.

Related News