கோலாலம்பூர், ஆகஸ்ட்.12-
நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் சட்டமன்ற சபாநாயகர் ஆகியோரின் அதிகார வரம்பு வரையறுக்கப்பட வேண்டும் என்று பாஸ் எம்.பி. தக்கியுடின் ஹசான் இன்று மக்களவையைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இரு அவைகளில் சபாநாயகர்களின் அதிகார வரம்பு குறைக்கப்படுவதற்கு ஏதுவாக அரசிலமைப்புச் சட்டத்தில் அரசாங்கம் திருத்தம் செய்ய வேண்டும் என்று தக்கியுடின் ஹசான் கேட்டுக் கொண்டார்.
பெர்சத்து கட்சியைச் சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் ஆதரவைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு வழங்கிய விவகாரத்தில் அந்த 6 எம்.பி.க்களும் இன்னமும் எதிர்கட்சி வரிசையில் அமர்வதற்கு முடிவு எடுத்துள்ள மக்களவை சபாநாயகர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துலின் முடிவைக் கேள்வி எழுப்பும் வகையில் தக்கியுடின் இந்தப் பரிந்துரையை முன் வைத்துள்ளார்.








