Jun 6, 2026
Thisaigal NewsYouTube
போலீசார் துரத்தல் : தேடப்பட்டு வந்த 3 குற்றவாளிகள் உட்பட நால்வர் கைது
தற்போதைய செய்திகள்

போலீசார் துரத்தல் : தேடப்பட்டு வந்த 3 குற்றவாளிகள் உட்பட நால்வர் கைது

Share:

பெட்டாலிங் ஜெயாவிலிருந்து கோலாலம்பூர் வரை காரில் தப்பியோடிய தேடப்பட்டு வந்த 3 குற்றவாளிகள் உட்பட நான்கு சந்தேக நபர்களைப் போலீசார் இன்று அதிகாலை சினிமா பாணியில் துரத்திப் பிடித்தனர்.

இன்று அதிகாலை கோத்தா டாமன்சாராவில் உள்ள எண்ணெய் நிலையம் அருகே போலீசார் ஒரு கருப்பு நிற காரை நிறுத்த முயன்றனர். ஆனால், காரை நிறுத்தாமல் ஓட்டுநர் அதிவேகமாகத் தப்பியோடினார். கோலாலம்பூர், செமாராக் பகுதியில் உள்ளஜாலான் ஏர் ஜெர்னி வரை ஆபத்தான முறையில் சென்ற அந்த காரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

இது குறித்து பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் துணை ஆணையர் ஷம்சுடின் மாமட் கூறுகையில், அந்த காரில் இருந்து ஒரு அரிவாள் மற்றும் வீட்டின் பூட்டை உடைக்கப் பயன்படும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார். கைது செய்யப்பட்ட நால்வர் மீதும் ஒட்டுமொத்தமாக 56 குற்றப் பின்னணிகள் உள்ளன. அவர்கள் அனைவரும் நாளை மே 29 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு