Jun 6, 2026
Thisaigal NewsYouTube
சிறைத்துறையில் அவசர சீர்திருத்தம் தேவை: மனித உரிமை அமைப்பு வலியுறுத்தல்
தற்போதைய செய்திகள்

சிறைத்துறையில் அவசர சீர்திருத்தம் தேவை: மனித உரிமை அமைப்பு வலியுறுத்தல்

Share:

மலேசியாவின் சிறைச்சாலை அமைப்பில் உடனடியாக பெரிய அளவிலான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் இயக்கமான ஹகம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2025 ஜனவரியில், தைப்பிங் சிறையில் நடந்த வன்முறையில் ஒரு கைதி உயிரிழந்தார் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் காயமடைந்தனர். இது குறித்து சுஹாகம் நடத்திய பொது விசாரணை அறிக்கை, கைதிகள் நடத்தப்படும் விதம் மற்றும் சிறைச்சாலைகளின் மோசமான நிலையை அம்பலப்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் அது பரிந்துரைத்துள்ளது.

இது குறித்து ஹாகாம் தலைவர் டத்தோஸ்ரீ எம். ராமச்செல்வம் கூறுகையில், சிறைவாசம் என்பது ஒருவரின் அடிப்படை மனித கண்ணியத்தை இழப்பதாக அர்த்தமாகாது என்றார்.

சிறைகளில் உள்ள நெரிசல் மற்றும் பாதுகாப்பற்ற சூழல் கவலையளிப்பதாகக் கூறிய அவர், ஐநா-வின் சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கையை மலேசியா அங்கீகரிக்க வேண்டும் என்றும், சிறை அத்துமீறல்கள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு