Jun 6, 2026
Thisaigal NewsYouTube
உலு சிலாங்கூர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 10 வயது சிறுவன் சடலமாக மீட்பு
தற்போதைய செய்திகள்

உலு சிலாங்கூர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 10 வயது சிறுவன் சடலமாக மீட்பு

Share:

உலு சிலாங்கூர், சுங்கை பெர்னாம் ஆற்றில் பலத்த நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டு மாயமான 10 வயது சிறுவன் இன்று சடலமாக மீட்கப்பட்டான்.

முகமது ஆகிஃப் இம்ரான் என்ற அந்தச் சிறுவன், ஆற்றில் விழுந்ததாகக் கூறப்படும் இடத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில், இன்று மாலை 4.36 மணியளவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டான் என்று சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாரி முஸ்தகிம் ரிமோன் தெரிவித்தார். சுமார் 6 மீட்டர் ஆழமுள்ள ஆற்றுப் பகுதியில் தீயணைப்புப் படையின் முக்குளிப்போர், மூழ்கித் தேடியபோது, சிறுவனின் உடல் ஆற்றின் அடிப்பகுதியில் கண்டறியப்பட்டது.

நேற்று புதன்கிழமை பிற்பகல் 1.40 மணிக்கு இந்த விபத்து குறித்து அவசர அழைப்பு வந்தது. தொடர்ந்து இரண்டு நாட்களாக, மோப்ப நாய் பிரிவு , போலீசார், சுகாதார அமைச்சு மற்றும் சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகப் பணியாளர்கள் எனப் பல ஏஜென்சிகள் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். .

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு